தமிழ் FM ரேடியோ ஒன்லி கிவேன் பய் அஜய்க்குமரன்

Tamil FM - 24 hrs live internet radio given by CDMAJAI



Note:Requires flash player installed

உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்






எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன்.

வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம்.

சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சி வசனம், சூப்பர்ப்.. ஆங்கில வசனங்களின் ஆளுமை ஆங்காங்கே தலைகாட்டினாலும் இயல்பாகவே இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் கீழே யாருக்கும் புரியாது என்று இயல்பாய் வசனம் பேச முடியாமல் தவிப்பது.

நடிப்பு என்று வரும் போது படத்தில் நடித்த, கமல், மோகன்லால், போலீஸ் ஆபிசராக வரும் பரத் ரெட்டி, அபியும்,நானும் கணேஷ், கம்ப்யூட்ட்ர் ஹாக்கராய் வரும் இளைஞன், டிவி சேனல் ரிப்போர்ட்டராய் வரும் அனுஜா ஐயர், எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள்.

கமல் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போல என்பதால் எதை சொல்லி பாராட்டுவது என்றெ தெரியவில்லை. பல இடங்களில் சின்ன சின்ன உடல் மொழிகளீன் மூலம் அவரின் விருப்பு, வெறுப்புகளை வெளிபடுத்துவதும், க்ளைமாக்ஸ் காட்சியில் தான் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவர் விளக்கும் காட்சியில் அவரின் செய்கைக்கான ஞாயத்தை சொல்லும் இடம் ஆஹா.. ஸ்பெல்பவுண்ட் என்றால் அது மிகையில்லை.. சமூகத்தின் மேல் உள்ள கோபம், ஆத்திரம், இயலாமை, துக்கம், அழுகை, பின்பு அதை மென்று விழுங்கி மீண்டும் ஆளுமையான குரலில் பேசும் அந்த காட்சி அற்புதம். பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே நடிப்பை வெளிப்படுத்துவதும், ஹாட்ஸ் ஆப் கமல்.

அதே போல் மோகன்லால், மிகவும் சப்டூயூட் ஆக்டிங்.. இவரும் தன்னுடய உணர்வுகளை மிக அழகாய் தன் உடல் மொழியிலேயே வெளிபடுத்துகிறார். சில இடங்களில் அவரை மடக்கும் சீப் செக்கரட்டரி லஷ்மியை எதிர்க்கும் நேரத்தில் காட்டும் கண்ட்ரோல்ட் அரகன்ஸ் மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். தன் கீழே வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளிடம் ஆர்டர் போடும் போதும், காட்டும் அதிகாரம், பின்பு அவர்களிடம் காட்டும் பரிவை கூட தன்னுடய் குரல் மாடுலேஷனில் வெளிப்படுத்தும் அழகு அருமை.

அதே போல் போலீஸ் ஆபீசராய் வரும் டூயூட்டி பவுண்ட் பரத் ரெட்டியும், அதிரடி போலீஸ் காரனாய் வரும் கணேஷும், சரியாய் பொருந்தியிருக்கிறார்கள்.

முதல்மைச்சரின் வீட்டுக்கு, நம்முடய முதலமைச்சரின் வீட்டையும், குரலுக்கு அவரது குரலை போலவே மிமிக்ரி குரலை உபயோகித்து இருப்பது காண்ட்ரவர்ஸியை உருவாக்கலாம்.

மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு அருமை. அதிலும், ரெட் ஒன்னின் 4கே துல்லியம் படத்தில் எலலா இடஙக்ளில் தெரிகிறது. படத்தின் மூடுக்கேற்ற ஒளிப்பதிவு.

ஸ்ருதிஹாசனின் பிண்ணனி இசை படத்துக்கு தேவையான இடங்களில் ஆப்டாக அமைந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் கிடையாது ஆங்காங்கே சின்ன, சின்ன இடங்களில் பிண்ணனி இசையில் ஆர்.ஆராக உபயோகபடுத்தியிருக்கிறார். எங்கெங்கே பிண்ணனி இசை தேவையில்லை என்பதை உணர்ந்து இசையமைத்திருக்கும் ஸ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

படத்தில் கமல், மோகன்லால் போன்ற பெரிய ஸ்டார்களால லார்ஜர் தென் லைப் கேரக்டர்களிலேயே பார்த்து பழகி போன மக்களுக்கு இவர்களின் நடிப்பு அப்படியே தோன்றும். ஆனால் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் அதையெல்லாம் மறக்கடிக்கும் திரைக்கதையுடன் நாமும் ஓட ஆரம்பித்து விடுகிறோம்.

ஒரிஜினல் படத்திலிருந்து,க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் சொல்லும் காரணத்தை தவிர பெரிய மாற்றம் எதையும் செய்யாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சக்ரி டோலெட்டி..

படத்தில் குறைகளே இல்லையா என்றால் இருக்கிறது.. ஆங்காங்கே.. சின்ன, சின்ன இடங்களில் அதையெல்லாம் பார்த்தால் எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று காத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

உன்னை போல் ஒருவன் – நம்மில் ஒருவன்.

எ.வ.த.இ.மா.படம் – ஏ வெட்னெஸ்டே விமர்சனம்

டிஸ்கி:
தயவு செய்து இந்தி படத்தையும், இதையும் கம்பேர் செய்து பார்க்காதீர்கள்.. நான் ஏற்கனவே இந்தியில் 5 முறை பார்த்தும், புதிதாய்தான் இருந்தது இந்த படம். நஸ்ரூதீன் ஷா, அனுபம் கேர் போன்ற சிறந்த நடிகர்கள் இருந்தும் பத்திரிக்கைகளின் பாராட்டுகள் பெற்றாலும் கூட பெரிய அளவில் மக்களீடையே ரீச் ஆகவில்லை.. அதை இம்மாதிரியான பெரிய நடிகர்கள் நடிக்கையில் எல்லோருக்கு ரீச் ஆகும் நல்ல விஷயம் நடக்கிறதால்.. மேலும் நல்ல படங்கள் வரும். கமலை காமன் மேனாக ஏற்று கொள்ள முடியவில்லை என்று கூறும் விமர்சகர்களுக்காக..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க..


0 Responses So Far:

Recent Posts

IP TRACKER

Total Pageviews

CDMAJAI-AJAIKKUMARAN MSC IT(ANNAMALAI UNIVERSITY,ANNAMALAI NAGER,CHIDAMBARAM). Powered by Blogger.